Connect with us

கேம் சேஞ்சர் பிளாப் ஆகும் என ஆரம்பத்திலேயே தெரிந்தது – ஷங்கருக்கு எதிராக தயாரிப்பாளர் தில் ராஜு குற்றச்சாட்டு!

Featured

கேம் சேஞ்சர் பிளாப் ஆகும் என ஆரம்பத்திலேயே தெரிந்தது – ஷங்கருக்கு எதிராக தயாரிப்பாளர் தில் ராஜு குற்றச்சாட்டு!

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இயக்குநர் ஷங்கரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றன. தற்போது, அவரின் தமிழ்-தெலுங்கு இருமொழி படமான “இந்தியன் 2” மற்றும் ராம் சரணுடன் உருவாகிய “கேம் சேஞ்சர்” ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ்ஆபிஸில் கடும் தோல்வியை சந்தித்துள்ளன.

இந்நிலையில், “கேம் சேஞ்சர்” படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குநர் ஷங்கர் குறித்து வலுவான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டிகளில், “இந்த படம் எனக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. படம் தொடங்கும்போதே சில விஷயங்களை ஒப்பந்தத்தில் சேர்த்திருக்க வேண்டியிருந்தது. ஷங்கர் தேவையில்லாத செலவுகளை செய்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.

மேலும், “ஒரு படம் ஓடுமா, ஓடாதா என்பது எடிட்டிங்கின்போதே தெரிந்து விடும். இந்த படம் முன்னமே பிளாப் ஆகும் என எனக்கு தெரிந்தது. விநியோகஸ்தர்களுக்கும் இப்படம் மீது எந்த நம்பிக்கையும் இல்லை” எனவும் அவர் கூறியுள்ளார்.

தன் தயாரிப்பில் பொங்கல் 2025ல் வெளியான மற்றொரு திரைப்படமான “வஸ்துனம்” மட்டும் தான் சிறிதளவு வசூலில் காப்பாற்றியதாகவும், சங்கராந்தி காலக்கட்டத்தில் ஓரளவு நிதி ஆதரவை வழங்கியதாகவும் தில் ராஜு தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில், இயக்குநர் ஷங்கரின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும், அவரது படங்களுக்கு மீண்டும் உற்சாகம் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top