Connect with us

லாஜிக்கே இல்லாமல் சொதப்பும் டீசல், ஹரிஷ் கல்யாணனின் நிலைமை என்ன?

harish kalyan

Cinema News

லாஜிக்கே இல்லாமல் சொதப்பும் டீசல், ஹரிஷ் கல்யாணனின் நிலைமை என்ன?

Harish Kalyan: வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஹரிஷ் கல்யாண் அவருடைய முத்திரையை பதித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படங்கள் மக்களிடம் ரீச் ஆகிவிடுகிறது, ஆனால் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியான டீசல் படம் கை கொடுத்ததா அல்லது கவுத்து விட்டதா என்பதை பற்றி விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றி தற்போது பார்க்கலாம்

அதாவது இயக்குனர் சண்முகம் முத்துச்சாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் அது, கருணாஸ் போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட் மற்றும் பலர் நடிப்பில் இப்படம் இன்று அனைத்து திரையரங்களிலும் வெளியாகி இருக்கிறது.

harish diesel
harish diesel

இப்படத்தின் கதையானது வடசென்னையில் இருக்கும் மீனவ கிராமத்தில் இருந்து 17 கிலோமீட்டர் கச்சா எண்ணெய் குழாயை மத்திய அரசு பதிக்கிறது இதனால் அந்த மீனவர்களின் வாழ்வாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்படுவதால் கோபத்தில் சாய்குமார் அந்த குழாயிலிருந்து கச்சா எண்ணெயை திருடி மும்பைக்கு அனுப்பி விடுகிறார்.

அதன் பிறகு அதிலிருந்து தார் டீசல் பெட்ரோல் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு டீசல் பெட்ரோல்லை மீண்டும் சென்னைக்கு கொண்டு வருகிறார். வந்ததும் கலப்படம் இல்லாத டீசலை பெட்ரோல் பங்கில் இருந்து விற்கிறார் இன்னொரு பக்கம் அந்தப் பகுதியில் துறைமுகத்தை கட்ட வேண்டும் என்று கார்ப்பரேட் முதலாளிகள் முயற்சி எடுக்கிறார்கள்.

ஆனால் சாய்குமார் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் சூழ்ச்சி பண்ணி அவரை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு அந்த இடத்தில் துறைமுகம் கட்டலாம் என்று பிளான் பண்ணிய பொழுது இதை தடுக்கும் விதமாக ஹரிஷ் கல்யாண் உள்ளே இறங்குகிறார். அதன் பிறகு என்ன ஆகிறது ஜெயிலுக்குப் போன சாய்குமார் எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் மீதமுள்ள கதை.

ஆனால் இந்த படம் பெரிசாக பார்ப்பவர்களை ஈர்க்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. லாஜிக்கே இல்லாமல் சொதப்புவதால் ஹரிஷ் கல்யாண் இந்த படம் கை கொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அரசனாக ஆள வரும் சிம்பு, வெற்றி மாறனின் வெற்றி கூட்டணி

More in Cinema News

To Top