Connect with us

மணத்தி கணேசனின் வாழ்க்கை படத்தில் துருவ் விக்ரம் – புகைப்படத்துடன் வெளியான டக்கர் நியூஸ்..!!

Cinema News

மணத்தி கணேசனின் வாழ்க்கை படத்தில் துருவ் விக்ரம் – புகைப்படத்துடன் வெளியான டக்கர் நியூஸ்..!!

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இயக்குனர்களில் தவிர்க்க முடியாத இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் மாரி செல்வராஜ் மிகவும் குறுகிய காலத்திலே தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உருமாறியுள்ள இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் மாமன்னன் .

பட்டித்தொட்டி எங்கும் சக்கைபோடு போட்ட இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது . இதையடுத்து OTT தளத்தில் வெளியான இப்படம் அங்கேயும் பல சாதனைகளை படைத்தது.

இந்நிலையில் இயக்குநர் மாரிசெல்வராஜ் சீயான் விக்ரமின் அன்பு புதல்வனான துருவ் விக்ரமை வைத்து ஒரு தரமான படத்தை இயக்க உள்ளார் . அர்ஜுனா விருது பெற்ற பிரபல கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் எடுக்கப்பட உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் இந்த புதிய படத்தில் நடிப்பதற்காக துருவ் விக்ரம் கபடி பயிற்சி பெற்று வரும் நிலையில், அவருக்கு மணத்தி கணேசனே பயிற்சி அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது . ப்ரீ ப்ரொடக்சன் பணியில் இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top