Connect with us

CSK அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகல் – புதிய கேப்டன் யார் தெரியுமா..?

Featured

CSK அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகல் – புதிய கேப்டன் யார் தெரியுமா..?

13 வருடங்களாக சிஎஸ்கேவின் கேப்டனாக இருந்து வந்த எம்.எஸ். தோனி தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.Dhoni in focus as all set for IPL action | IPL News | Onmanorama

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி (நாளை) சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது .

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது.இதற்காக இரு அணி வீரர்களும் தங்களை தீவிரமாக ஆயுத்தபடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 13 வருடங்களாக சிஎஸ்கே ஆஸ்தான கேப்டனாக இருந்து வந்த எம்.எஸ். தோனி தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் கேப்டன்களுடன் கோப்பையை வைத்து எடுக்கப்பட்ட குழு படத்தை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அந்த குழு புகைப்படத்தை சென்னை அணியின் கேப்டன் ஸ்தானத்தில் எம்.எஸ்.தோனிக்கு பதிலாக இளம் வீரர் ருதுராஜ் நிற்கிறார். இதனால் ரசிகர்கள் பலத்த குழப்பத்தில் இருந்து வந்த நிலையில் வெல்கம் நியூ கேப்டன் ஆப் சிஎஸ்கே என ருதுராஜை வரவேற்றுள்ளனர்.

ஏற்கனவே தல தோனி இந்த தொடருடன் ஓய்வு பெற இருக்கும் நிலையில் தற்போது கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து 13 வருடங்களாக ஒரு சிங்கம் போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்திய எம்.எஸ்.தோனி அவர்களுக்கு பிக் சலூட் என ரசிகர்கள் அனைவரும் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தலைவரின் கூலி படத்தில் இணைந்த கட்டப்பா – சிறப்பு போஸ்டரை வெளியிட்டது படக்குழு..!!

More in Featured

To Top