Connect with us

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் குறித்து தனுஷ் ட்வீட்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

Dhanush_Aishwarya

Cinema News

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் குறித்து தனுஷ் ட்வீட்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கணவர் தனுஷை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அவரது லால் சலாம் படம் குறித்து தனுஷ் ட்வீட் வெளியிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

சூப்பர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கணவர் தனுஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும், ரஜினிகாந்தும் மொய்தீன் பாய் என்ற வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் படத்தில் நடித்துள்ளார். படம் 1990களில் கிரிக்கெட்டை மையமாக வைத்து நடக்கும் சம்பவங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் குறித்து எக்ஸ் தளத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ட்வீட்டில், “இன்று முதல் லால் சலாம்” எனத் தெரிவித்துள்ளார். பிரிந்து வாழ்ந்தாலும், ஐஸ்வர்யாவின் படம் குறித்து தனுஷ் ட்வீட் போட்டுள்ள நிலையில், இந்த ட்வீட் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top