Connect with us

உயிருக்கு போராடிய இயக்குநர்.. பல லட்சம் கொடுத்து உதவிய தனுஷ்!

Featured

உயிருக்கு போராடிய இயக்குநர்.. பல லட்சம் கொடுத்து உதவிய தனுஷ்!

நடிகர் தனுஷ் தற்போது ஹிந்தியில் Tere Ishk Mein படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப்படத்தை இயக்கும் ஆனந்த் எல். ராய், படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்.

இந்த படத்துடன் சேர்ந்து, தனுஷ் கைவசம் குபேரா, இட்லி கடை, தனுஷ் 55 மற்றும் தனுஷ் 56 உள்ளிட்ட பல திரைப்படங்கள் உள்ளன.
தொடர்ந்து பிஸியாக இருக்கும் தனுஷ், ஒரு இயக்குநருக்கு செய்த உதவி தற்போது வெளிவந்துள்ளது.

தனுஷை வைத்து படம் எடுத்த ஒரு இயக்குநர், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சுமார் ரூ. 25 லட்சம் மருத்துவபில்லாகிவிடுகிறது. இது குடும்பத்தையும் நண்பர்களையும் மிகுந்த அழுத்தத்தில் ஆழ்த்தியது. இப்போது என்ன செய்வது என யாருக்கும் புரியவில்லை.

அப்போது, இறுதியாக தனுஷிடம் உதவி கேட்டனர். தனுஷ் தாமதிக்காமல், உடனடியாக அந்த பில்லை செலுத்தி உதவினார். இதனால் அந்த இயக்குநர் மீண்டும் உடல்நலத்துடன் வீடு திரும்பியுள்ளார்.
இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top