Connect with us

நடிகர் தனுஷின் உடல்நிலை சரியில்லையா? என்ன நடந்தது?

Featured

நடிகர் தனுஷின் உடல்நிலை சரியில்லையா? என்ன நடந்தது?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷ் தற்போது உலகளாவிய அளவில் அறியப்பட்டவர். கோலிவுட்டின் எல்லையைத் தாண்டி ஹாலிவுட்டிலும் தனது திறமையை நிரூபித்தவர். அவர் நடிப்பதுடன் மட்டுமல்லாமல், இயக்குநராகவும் கவனம் பெற்றுள்ளார். 2024 ஆம் ஆண்டில் “ராயன்” படத்தை வெளியிட்டதன் மூலம் அவரது இயக்குநரான படைப்புகள் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அடுத்த ஆண்டு “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” மற்றும் “இட்லி கடை” என இரண்டு படங்களை கையெழுத்திட்டுள்ளார்.

“இட்லி கடை” படத்தில் அவர் இயக்குனராக பணியாற்றுகிறார், இதில் நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பின் போது தனுஷின் உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டு ஓய்வுக்கு சென்னைக்கு சென்றுள்ளார். இப்போது அவருடைய உடல்நிலை நலம் பெறத் துவங்கியுள்ளது. ஓய்வுக்குப் பிறகு அவர் வெளிநாட்டிற்கு புத்தாண்டை கொண்டாட சென்றுள்ளதாக தகவல் பரவியுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து தவறான செய்திகள் பரப்பி வருகிறார்கள். 

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top