Connect with us

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து: நாளை முடிவுக்கு வரும் வழக்கு!

Featured

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து: நாளை முடிவுக்கு வரும் வழக்கு!

நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமணம் ரசிகர்களிடையே மாபெரும் கொண்டாட்டமாக இருந்தது. யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்களுடன் குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டு வந்த இந்த ஜோடி, திடீரென சில வருடங்களுக்கு முன்பு பிரிவை அறிவித்து, குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்தனர்.


சமீபத்தில் நடந்த விசாரணை அமர்வில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, “விவாகரத்து தேவையென்றும், மீண்டும் ஒன்றிணைய திட்டம் இல்லை” என உறுதியாக தெரிவித்தனர். இது, இரு குடும்பத்தினரிடமும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் இந்த விவகாரத்தில் மிகுந்த மனவலியடைந்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.


இந்த நிலையில், தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா, கனிமொழி எம்.பி. குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.
“எங்களுடைய நட்பு 20 ஆண்டுகளாக தொடர்கின்றது. நான் எந்தவித சோகத்திலும் இருக்கும் நேரத்தில், கனிமொழி எனக்கு ஆதரவாக இருக்கிறார். அவர் தான் எனது வாழ்க்கை வழிகாட்டி” என உருக்கமாக கூறியுள்ளார்.


இருவரும் இணைவார்கள் என எதிர்பார்த்த குடும்பத்தினரும், ரசிகர்களும் தற்போது மனச்சோர்வுக்கு உள்ளாகியுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பு நாளை அறிவிக்கப்படவுள்ளது, அதன்மூலம் இந்த விவகாரத்திற்கு முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top