Connect with us

கூலி திரைப்படத்தின் கதையா இது? லோகேஷ் செய்யப்போகும் மாஸ் சம்பவம்!

Featured

கூலி திரைப்படத்தின் கதையா இது? லோகேஷ் செய்யப்போகும் மாஸ் சம்பவம்!

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படம் ‘கூலி’. இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ரஜினியுடன் இணைந்து சௌபின் சாஹிர், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றியுள்ளார். லோகேஷ் கனகராஜ் என்றாலே ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாய் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதேபோல ‘கூலி’ படமும் அதே ஸ்டைலிலும் உருவாகியுள்ளது.

சமீபத்தில் நடந்த பேட்டியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, “படத்தின் முதல் பாதி ஒரு எமோஷனல் ட்ராமாவாக இருக்கும். இடைவேளைக்குச் சற்றும் முன் ரஜினியின் பெரிய மாற்றம் (Transformation) காட்சியாக வரும். அதன்பின் படம் முழுக்க முழுக்க ஆக்ஷனாகவே செல்லும்” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ‘கூலி’ திரைப்படத்தின் கதைக்குரிய முக்கிய தகவலும் வெளியாகியுள்ளது. கடந்த காலத்தில் செய்த தவறுகளை சரிசெய்யும் ஒரு மனிதன், தனது நிலையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக எடுக்கும் பயணம் மற்றும் பழிவாங்கும் முயற்சிகளே இந்தக் கதையின் மையம் என கூறப்படுகிறது.

ஆக்ஷனும், உணர்ச்சியும் கலந்த ஒரு வித்தியாசமான படமாக ‘கூலி’ உருவாகியிருக்கிறது. லோகேஷின் பிரத்தியேகமான ஸ்டைலில் இந்தக் கதை எப்படிப் பட்டதாக உள்ளது என்பதை ரசிகர்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் பார்த்து மகிழலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top