Connect with us

செண்ட்டிமென்ட்டை தகர்த்த ‘கூலி’ – லோகேஷ் கனகராஜின் தரமான சம்பவம்..

Featured

செண்ட்டிமென்ட்டை தகர்த்த ‘கூலி’ – லோகேஷ் கனகராஜின் தரமான சம்பவம்..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இசையை அனிருத் ரவிச்சந்தர் அமைத்துள்ளார்.

இந்த படத்தில் நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சோபின் ஷபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்காக சிறப்பு நடனம் நிகழ்த்தியுள்ளார். அமீர் கான் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூலி படத்தைப்பற்றி சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், “இந்த மாதம் சிங்கிள் பாடல் அல்லது புரமோ பாடல் வெளியாகலாம். அனிருத் மற்றும் டி.ஆர் இருவரும் சேர்ந்து பாடி, டான்ஸ் ஆடியுள்ளனர். இந்த பாடல் படத்தில் இடம் பெறுகிறதா அல்லது புரமோ பாடலா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

இப்படத்தின் முதல்பாதியை பார்த்து, லோகேஷ் கனகராஜை ரஜினிகாந்த் பாராட்டி, கட்டிப்பிடித்துள்ளார். OTT தளங்கள் பல போட்டி போட்டுக் கொண்டு இந்த படத்தை உயர்ந்த விலையில் வாங்கியுள்ளன. கூலி படம் சென்டிமென்ட்டாக இருக்காது. லோகேஷ் கனகராஜ் தரமான சம்பவத்துடன் ஒரு வித்தியாசமான படம் செய்துள்ளார்” என தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top