Connect with us

‘கூலி’ படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனை: பல கோடி ரூபாய்க்கு, தமிழ் சினிமாவில் ஆல் டைம் ரெக்கார்டு!

Featured

‘கூலி’ படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனை: பல கோடி ரூபாய்க்கு, தமிழ் சினிமாவில் ஆல் டைம் ரெக்கார்டு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிக எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி உலகமெங்கும் திரையிடப்படுகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது முதல், வணிக ரீதியாகவே படத்தின் ஓட்டம் தொடங்கிவிட்டது.

ஆடியோ ரைட்ஸ், ஓடிடி மற்றும் சாட்டலைட் உரிமைகள் உள்ளிட்ட முக்கியமான விநியோக உரிமைகள் அனைத்தும் ஏற்கனவே விற்பனையாகிவிட்டன. இதையடுத்து, கடந்த மாதம் முதல் ‘கூலி’ படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்தன. இந்தச் சூழலில், ‘கூலி’ திரைப்படம் ரூ.81 கோடிக்கு மாபெரும் தொகைக்கு வெளிநாட்டு உரிமைகள் விற்பனையாகியுள்ளது. இது, தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எந்தத் திரைப்படத்துக்கும் கிடைக்காத மிகப்பெரிய தொகையாகும். இதன் மூலம், ‘கூலி’ படம் வெளிநாட்டு உரிமை விற்பனையில் ஆல் டைம் ரெக்கார்ட் நிலைபெற்றுள்ளது.

ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில், சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, ஷோபின் சபீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், முன்னணி நடிகை பூஜா ஹெக்டே, இப்படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம், ரிலீஸுக்கு முன்பே பல சாதனைகளைப் படைத்த நிலையில், படம் வெளியாகும் நாளில் ரசிகர்களிடையே வெறித்தனமான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பொன்ராம் இயக்கிய ‘கொம்புசீவி’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

More in Featured

To Top