Connect with us

4 நாளில் ரூ.400 கோடி வசூல் – ‘கூலி’ குத்தாட்டம்… லோகேஷை குறை சொல்லும் விமர்சனங்கள்!

Featured

4 நாளில் ரூ.400 கோடி வசூல் – ‘கூலி’ குத்தாட்டம்… லோகேஷை குறை சொல்லும் விமர்சனங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘கூலி’ திரைப்படம் வெறும் 4 நாட்களில் ரூ.400 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வெளியான முதல் நாளிலேயே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம், ரசிகர்களிடையே பண்டிகை சூழலை ஏற்படுத்தியுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ள ‘கூலி’, ரஜினியின் கேரிஸ்மா இன்னும் குறையாதது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

ஆனால், இதே நேரத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. “சூப்பர் ஸ்டார் படத்தை குறை இல்லாமல், லோக்கேஷ் தனது முழு திறமையுடன் எடுக்க முடியாதா?” என்ற கேள்வி ரசிகர்களிடையே பரவி வருகிறது.

சிலர், திரைக்கதை மற்றும் சித்திரிப்பு பகுதிகளில் பிழைகள் உள்ளதாக சுட்டிக்காட்டினாலும், ரஜினியின் ஆட்டம், பஞ்ச் வசனங்கள், மற்றும் ரசிகர்கள் ஆதரவு காரணமாக படம் குவித்து வசூல் செய்து வருகிறது.

‘கூலி’ தற்போது உலகளவில் சூப்பர் ஹிட் என போற்றப்படுகிறது. அடுத்தடுத்த வாரங்களில் படம் எந்த அளவுக்கு வசூல் சாதனை படைக்கப் போகிறது என்பதை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top