Connect with us

குக் வித் கோமாளி 6: வெளியான போட்டியாளர்களின் லிஸ்ட் – சன் டிவி நடிகையும் இருக்கிறார்!

Featured

குக் வித் கோமாளி 6: வெளியான போட்டியாளர்களின் லிஸ்ட் – சன் டிவி நடிகையும் இருக்கிறார்!

யப்பா சிரிக்க முடியலை, வயிறு வலிக்கும், நிறுத்துங்கள் என்ற சொல்லும் சிரிப்பின் உச்சம் என்ற அளவிற்கு ஒளிபரப்பாகி வந்த ஷோ “குக் வித் கோமாளி”. முதல் சீசன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தயாராகி ஒளிபரப்பாகி செம ரெஸ்பான்ஸ் பெற்றது. இதனால் அடுத்தடுத்த சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பானது.

ஆனால் கடந்த 5வது சீசனில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் ஒருவர் இந்த தொலைக்காட்சி விட்டே சென்றுவிட்டார். இதெல்லாம் மக்களுக்கு தெரிந்த கதை. ஆனால், வரும் மே 4ம் தேதி முதல் “குக் வித் கோமாளி” சீசன் 6 ஒளிபரப்பாக உள்ளது. புதிய நிகழ்ச்சிக்கான புரொமோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் போட்டியிடும் போட்டியாளர்கள் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பான “எதிர்நீச்சல்” தொடரில் பிரபலமான நடிகை மதுமிதா, இவர் தற்போது “விஜய்யில் அய்யனார் துணை” என்ற தொடரில் நடித்து வருகிறார். அவர் “குக் வித் கோமாளி” சீசன் 6 இல் ஒரு போட்டியாளராக இருக்கிறார். அதேபோல், சன் டிவியின் “மூன்று முடிச்சு” தொடரில் டெர்ரரான நபராக நடித்து வரும் ப்ரீத்தி, ஒரு போட்டியாளராக உள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top