Connect with us

சினிமாவில் ஜூனியர், சீனியர் பேதம் குறித்து சிம்ரன் நேரடி பதில்!

Featured

சினிமாவில் ஜூனியர், சீனியர் பேதம் குறித்து சிம்ரன் நேரடி பதில்!

தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகை சிம்ரன்.
விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். அவருடைய நடனத்திற்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில், “குட் பேட் அக்லி” படத்தில் கேமியோ ரோலில் நடித்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற “சுல்லதானா” பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து, சிம்ரன் நடிப்பில் “டூரிஸ்ட் பேமிலி” படம் வெளிவரவுள்ளது. இப்படம் மே 1ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. திரைப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. திரைப்படம் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிம்ரன், சசிகுமார் உடன் ஜோடியாக நடித்தது குறித்து பேசியுள்ளார்.


“டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ஒரு நல்ல குடும்பக் கதையாக இருந்ததால் நான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதுமட்டுமின்றி, சிறந்த இயக்குநரும் நடிகருமான சசிகுமாருடன் நடிப்பது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. சினிமாவில் ஜூனியர், சீனியர் என்ற பேதம் இருக்கக்கூடாது. திறமைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top