Connect with us

‘சியான் 62’ படத்தின் பெயரை அறிவித்தது படக்குழு – டைட்டில் டீசர் இதோ..!!!

Cinema News

‘சியான் 62’ படத்தின் பெயரை அறிவித்தது படக்குழு – டைட்டில் டீசர் இதோ..!!!

சீயான் விக்ரம் நடிக்கும் ‘சியான் 62’ படத்தின் சிறப்பான தரமான டைட்டில் டீசர் வெளியாகி செம் வைரலாகி வருகிறது .

தமிழ் சினிமாவில் இருக்கும் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சீயான் விக்ரம் . இவரது நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாக உள்ள திரைப்படம் தான் ‘சீயான் 62’ .

இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ‘சீயான்’ விக்ரமுடன் சேர்ந்து , எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர் .

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தில் யார் கதாநாயகி என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தில் சீயான் விக்ரமுடன் சார்பட்டா நாயகி துஷாரா விஜயன் கைகோர்த்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது .

இந்நிலையில் நடிகர் சீயான் விக்ரம் இன்று தனது 57 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்கும் விதமாக ‘சீயான் 62 ’ படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது .

வீர தீர சூரன் என பெயரிடப்பட்டுள்ள சீயான் 62 படத்தின் டைட்டில் டீசர் இதோ…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Sundar C Thalaivar173 OUT! அடுத்த நிமிஷமே கமல்–குஷ்பூ நேரில் சந்திப்பு… என்ன காரணம்?”
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top