Connect with us

எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை.. சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

SV_Shekar

Cinema News

எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை.. சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சில ஆண்டுகளுக்கு முன் பெண் பத்திரிகையாளர்களை தவறாக பேசிய நடிகர் எஸ்.வி.சேகர்ருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018இல் தனது சமூக ஊடக பக்கத்தில் பெண் பத்திரிகையாளர் குறித்து மிகவும் கேவலமான விமர்சனம் ஒன்றை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல், புகார் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது எனக் கூறி தண்டனை வழங்கியுள்ளார்.

அதன்படி எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, எஸ்.வி.சேகர் பாஜகவில் தனக்கு முக்கியத்துவம் தராததால் கட்சியில் இருந்து விலகி அண்ணாமலையை விமர்சித்து தொடர்ந்து பேசிவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உண்மை தான்! ‘ஜனநாயகன்’ படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ 🔥

More in Cinema News

To Top