Connect with us

மறுபடியும் முதல இருந்தா – தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!!

Featured

மறுபடியும் முதல இருந்தா – தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!!

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்து வரும் 6 நாட்களுக்கு, இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்து வரும் 6 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது .

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், ஓரிரு இடங்களில், இன்றும், நாளையும் இடிமின்னலுடன் மழை பெய்யக்கூடும் .சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் .

டிச.8.9.10 ஆகிய தேதியில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ,மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘ஜனநாயகன்’ சென்சர் சர்ச்சையில் புதிய திருப்பம் – வழக்கை வாபஸ் வாங்கி ரிவைசிங் கமிட்டியை அணுகும் தயாரிப்பு நிறுவனம் ⚠️🎬

More in Featured

To Top