Connect with us

தணிக்கைக் குழு கடும் முடிவு: ‘ஜனநாயகன்’ படத்தில் 27 காட்சிகள் நீக்கம்✂️

Cinema News

தணிக்கைக் குழு கடும் முடிவு: ‘ஜனநாயகன்’ படத்தில் 27 காட்சிகள் நீக்கம்✂️

‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கைக் குழு 27 காட்சிகளில் கட் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி, இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, படத்தில் இடம்பெறும் இராணுவம் தொடர்பான காட்சிகள், தேசிய பாதுகாப்பு மற்றும் அரசியல் உணர்வுகளைத் தொடும் வசனங்கள் ஆகியவை தணிக்கைக் குழுவின் கவனத்தை அதிகமாக ஈர்த்ததாக கூறப்படுகிறது. இவ்வகை காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தக் கூடும் என்ற காரணத்தால், சில மாற்றங்கள் மற்றும் விளக்கங்கள் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக படத்தின் தணிக்கை நடைமுறை எதிர்பார்த்ததை விட நீண்ட நேரம் எடுத்துக் கொண்டுள்ளதாகவும், தணிக்கைக் குழு சுட்டிக்காட்டிய திருத்தங்களை தற்போது படக்குழு மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக தீர்ந்து, தேவையான மாற்றங்கள் நிறைவேறினால், ‘ஜனநாயகன்’ படம் எந்த தடையுமின்றி விரைவில் வெளியீட்டை எட்டும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  👉 “Futuristic Love Story-ஆ? LIK படம் ரசிகர்களை கவருதா?”

More in Cinema News

To Top