Connect with us

பிசியான சிம்பு, அறிமுக இயக்குனருக்கு கிடைத்த வாய்ப்பு

simbu1

Cinema News

பிசியான சிம்பு, அறிமுக இயக்குனருக்கு கிடைத்த வாய்ப்பு

Simbu: சிம்பு தற்போது வெற்றி மாறன் கூட்டணியில் அரசன் படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படத்திற்கான போஸ்டர்கள் வெளியான நிலையில் சிம்புவின் வித்தியாசமான லுக்கு பார்த்து ரசிகர்கள் என் தலைவர் திரும்ப வந்துவிட்டார் என்ற நம்பிக்கையில் படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு சிம்புவின் போஸ்டர்கள் வித்தியாசமாக இருக்கிறது.

இதனை தொடர்ந்து அஸ்வின் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிப்பதற்கு கமிட் ஆகியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தைகளும் ஆரம்பித்தாச்சு. அதாவது இப்ப இருக்கிற இயக்குனர்களை விட புதுசாக வர இயலப்புகளுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும் அதே நேரத்தில் நல்ல படங்களையும் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிம்பு அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் இயக்குனர் தீபக் ரெட்டி என்பவர் உடன் சிம்பு அடுத்ததாக கூட்டணி வைக்கப் போகிறார். இந்த இயக்குனர் இதற்கு முன்பாக குறும்படம் ஒன்றே மட்டும் இயக்கி இருக்கிறார். அந்த குறும்படத்தை பார்த்த சிம்புவுக்கு இயக்குனர் மீது நம்பிக்கை வந்ததால் கூட்டணி வைப்பதற்கு சம்மதம் கொடுத்து விட்டார். இவர்கள் கூட்டணி வைக்கும் அந்தப் படத்தை சித்தாரா என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கப் போகிறது.

மேலும் இந்த அப்டேட் அதிகார அறிவுடன் கூடிய சீக்கிரத்தில் வெளிவரும். இப்படி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சிம்பு பிசியாக இருப்பதால் கல்யாண வாழ்க்கை பற்றி யோசிக்காமல் ஓடிக்கொண்டு வருகிறார். ஆனால் டி ஆர் ராஜேந்திரனுக்கு, தன் மகனின் கல்யாண வாழ்க்கை கேள்விக்குறியாக இருப்பதால் ரொம்பவே பீல் பண்ணுகிறார்.

அதனால் சினிமாவில் எப்படி சிம்புவுக்கு நல்ல காலம் பிறந்ததோ அதை மாதிரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் நல்லது நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நாளை ரிலீஸ் ஆகப்போகும் மாரி செல்வராஜின் பைசன், இன்று கேட்ட மன்னிப்பின் ரகசியம்

More in Cinema News

To Top