Connect with us

தளபதி 68 படத்தின் Title இது கிடையாது..! Update வெளியிட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!

Cinema News

தளபதி 68 படத்தின் Title இது கிடையாது..! Update வெளியிட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன. இந்த படத்திற்கு ’பாஸ்’ அல்லது ’பஸ்ஸில்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக இணையதளங்களில் வதந்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது. ‘தளபதி 68’ படத்தின் அப்டேட்டுக்களை பார்த்தேன். உங்கள் அன்புக்கு நன்றி, தயவு செய்து நிதானமாக இருங்கள்.

உண்மையான டைட்டிலை வெங்கட் பிரபு விசேஷமாக அமைத்திருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் நிச்சயம் ’பாஸ்’ அல்லது ’பஸ்ஸில்’ அல்ல’ என தெரிவித்துள்ளார். அர்ச்சனா கல்பாத்தியின் இந்த விளக்கத்தை அடுத்து இந்த படத்தின் டைட்டில் பாஸ் அல்லது பஸ்ஸில் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் என்ன டைட்டில் என்பதை வரும் புத்தாண்டு வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.

இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் இந்த படம் வளர்ந்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மலையாள சினிமாவில் அறிமுகமாகும் பாரதிராஜா - வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

More in Cinema News

To Top