Connect with us

திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்!

Cinema News

திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்!

சைரட் எனும் மராத்தி படத்தின் ரீமேக்கான தக் தக் படத்தின் மூலம் பாலிவுட்டில் போனி கபூருக்கும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் மகளாக பிறந்த ஜான்வி கபூர் நடித்து பாலிவுட்டில் வாரிசு நடிகையாக அறிமுகமானார்.

நெபோடிஸம் சர்ச்சையில் இவரது பெயர் அதிகளவில் அடிபட்டாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி பல படங்களில் நடித்துள்ள ஜான்வி கபூர் முதன்முறையாக தென்னிந்தியா பக்கம் திரும்பி டோலிவுட்டில் ஜூனியர் என்டிஆர் படத்தில் நடித்து வருகிறார்.

திருப்பதியில் லட்டுக்கு பதிலாக என்ன திடீரென ஜாங்கிரி இருக்கே என ரசிகர்கள் #DevaraGlimpse ஹாஷ்டேக்கில் ஜான்வி கபூர் திருப்பதிக்கு விசிட் அடித்ததை வைத்து வர்ணித்து வருகின்றனர். திருப்பதி கோயிலுக்கு அழகாக பட்டுப்புடவையை கட்டிக் கொண்டு பவ்யமாக இன்ஸ்டாகிராம் பியூட்டியாக இல்லாமல் ஸ்ரீதேவி மகளாக ஜான்வி கபூர் சென்றதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஜான்வி கபூர் செல்லும் போது அவரை சூழ்ந்து கொண்டு பத்திரிகையாளர்கள் புகைப்படக் கலைஞர்கள் போட்டோக்களையும், வீடியோக்களையும் எடுத்து வரும் நிலையில், சிலர் அவர்களை தள்ளி விட, அவங்களை தள்ளி விடாதீர்கள் ப்ளீஸ் என பதறிப் போய் ஒருவரை தூக்கிவிட ஜான்வி கபூர் ஓடும் காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top