Connect with us

மீண்டும் அஜித் படத்தை ரீமேக் செய்யப்போகும் சல்மான்…இப்படி ஒரு விபரீதமா??

Cinema News

மீண்டும் அஜித் படத்தை ரீமேக் செய்யப்போகும் சல்மான்…இப்படி ஒரு விபரீதமா??

பாலிவுட் திரையுலகில் மிக பெரிய நடிகராக மட்டும் இன்றி மாஸ் நடிகராகவும் இருப்பவர் தான் நடிகர் வில்லன் சல்மான் கான் அவர்கள்….இவர் ஏற்கனவே தமிழில்-இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் – தமன்னா நடிப்பில் கடந்த 2014 வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற வீரம் படத்தின் இந்தி ரீமேக்காக ஹிந்தியில் எடுக்கப்பட்ட,கிசி கா பாய் கிசி கி ஜான் என்கிற படத்தில் நடித்திருந்தார்…இந்த படம் அங்கு பல மாற்றங்களுடன் தான் இருந்தது…

முழுவதுமாக பேமிலி ஆடியன்ஸ் மற்றும் அஜித் ரசிகர்களை சேடிஸ்பை செய்யும் விதத்தில் வெளியான இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றதை அடுத்து இப்படி ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது….ஆனால் பெரிதும் கவரவில்லை என்றும் சொல்லலாம்…

அஜித் நடித்திருந்த கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்க பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்து இருந்தார்… இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியான நிலையில் ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் மிகவும் கலவையான விமர்சனங்களை பெற்றது….அதனை போல இந்த படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் இது உண்மையிலேயே வீரம் படத்தின் ரீமேக் தானா என விமர்சித்தும் இருந்தனர்..

படத்தின் கதையை அப்படியே மாற்றி கூடுதல் மாஸ் காட்சிகளை கூட்டியது தான் இப்படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு காரணமாக அமைந்தது….இந்நிலையில் இதை தொடர்ந்து சல்மான் கான் மீண்டும் அஜித் நடிப்பில் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட ஒரு படத்தை ரீமேக் செய்ய்ஞ் உள்ளாராம்..

அஜித் – கவுதம் மேனன் கூட்டணியில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான,என்னை அறிந்தால் படத்தின் ரீமேக் குறித்த பேச்சு தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் உறுதியான தகவல்கள் வெளியாகும் என சொல்லப்படுகிறது..இதையாவது ஒழுங்காக செய்வார்களா என பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழகத்தில் அதிகரிக்கும் ரேஷன் அரிசி கடத்தல் - நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top