Connect with us

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறப்பு – அழகிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்..

Featured

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறப்பு – அழகிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்..

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடியாக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகன் ஷாரிக், 2016ம் ஆண்டு வெளியான பென்சில் திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் அறிமுகமானார்.

இதன்பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பெரும் கவனம் பெற்றார். தொடர்ந்து டான், ஜிகிரி தோஸ்து, நேற்று இந்த நேரம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஷாரிக், தனது நீண்ட நாள் காதலியான மரியாவை கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, கடந்த சில மாதங்களாக மரியா கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில், ஜூன் 28ஆம் தேதி இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது மகனுடன் எடுத்த புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக ஷாரிக் சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹனிமூன் பற்றியப் பதிவால் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகிய த்ரிஷா!

More in Featured

To Top