Connect with us

பிக் பாஸில் சம்பாதித்து சொந்த காசில் எடுத்த படம் – அம்மா முன் உடைந்து அழுத ஜோவிகா!

Featured

பிக் பாஸில் சம்பாதித்து சொந்த காசில் எடுத்த படம் – அம்மா முன் உடைந்து அழுத ஜோவிகா!

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, “மிஸஸ் அண்ட் மிஸ்டர்” என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. போஸ்டரில், வனிதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்து ராபர்ட் மாஸ்டர் வயிற்றில் முத்தம் கொடுக்கிறார். படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அங்கு ஜோவிகா உணர்ச்சிகரமாக பேசியது அனைவரையும் தீவிரமாக பாதித்தது.

ஜோவிகா கூறினார்: “நான் விஜய் டிவிக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். அவர்கள் இல்லையாயின் இந்த படத்தை எடுத்திருக்க முடியாது. இந்த வயதில், என்னுடைய சொந்த உழைப்பில் எடுத்த படம் இதுதான். விஜய் டிவி தான் என்னை தயாரிப்பாளராக்கியது. வெளிநாடுகளிலும் என்னை அன்புடன் வரவேற்றனர். அப்படி இல்லையாயின் பிக் பாஸ் வீட்டில் நீண்ட நாட்கள் தங்கி இருக்க முடியாது. படத்துக்கு முக்கிய உதவி ஸ்ரீகாந்த் அவர்களுக்கும், படக்குழுவிலும் அனைவருக்கும் நன்றி. தொழிலாளர்கள், நடிகர்கள் எல்லோரும் தங்கள் மனசார்ந்து உழைத்ததால்தான் படம் முடிந்தது. உங்கள் ஆதரவால் தான் நாங்கள் தனியாக இல்லை என்று உணர்கிறேன்.”

ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் பார்த்திபன் இயக்கிய “டீன்ஸ்” படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அடுத்து அம்மா வனிதா விஜயகுமார் “மிஸஸ் அண்ட் மிஸ்டர்” படத்தை எழுதி இயக்கி தயாரித்துள்ளார்.

இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் பிரபலமான சுமத்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இரண்டு படங்களில் வனிதா கமிட்டாகி உள்ளார். அவை அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதேவேளை, “மிஸஸ் அண்ட் மிஸ்டர்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வனிதா இதுவரை நடந்த அனைத்துக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top