Connect with us

சர்வதேச ஒருநாள் போட்டி பேட்டர்கள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம்..!!

Featured

சர்வதேச ஒருநாள் போட்டி பேட்டர்கள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம்..!!

சர்வதேச ஒருநாள் போட்டி பேட்டர்கள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம்.

நடப்பாண்டில் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் தனது திறமையையும் ஆற்றலையும் முழுவதுமாக வெளிப்படுத்தி அற்புதமாக விளையாடி அணிக்காக இமாலய ரன்களை குவித்தார். துடிப்புடன் விளையாடி வரும் அவர் ஏரளாமான சதங்களை அடித்து சர்வதேச ஒருநாள் போட்டி பேட்டர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வந்தார்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சுப்மன் கில் விளையாடாததால் புள்ளிகள் குறைந்து தற்போது அவர் பின்னுக்குச் சென்றுள்ளார். இதன் காரணமாக இரண்டாம் இடத்தில் இருந்து வந்த பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் தற்போது மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சுப்மன் கில் இரண்டாம் இடத்திற்கு சென்றதை கண்டு ஏமாற்றமடைந்த அவரது ரசிகர்கள் இன்னும் 2 சதத்தை போட்டு விட்டதை பிடிங்க தலைவரே என கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட்டில் அனைத்து விதமான பார்மெட்டிலும் நம்பர் 1 அணியாக இருக்கும் இந்திய அணி நம்பர் 1 palyer-கள் பட்டியலிலும் முதல் இடம் பிடித்து சாதனை படைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆசையுடன் அன்பு கட்டளை போட்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top