Connect with us

அயலான் படத்தின் VFX காட்சிகளுக்கு மட்டும் இத்தனை கோடி செலவானதா..? ஷாக்கிங் தகவல்

Cinema News

அயலான் படத்தின் VFX காட்சிகளுக்கு மட்டும் இத்தனை கோடி செலவானதா..? ஷாக்கிங் தகவல்

திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்ட சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகி அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியான திரைப்படம் தான் அயலான்.

சயின்ஸ் பிக்சன் படமாக உருவான இப்படத்தில் நம்ப வீட்டு பிள்ளை எஸ்.கே ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார் மேலும் இவர்களுடன் யோகி பாபு , கருணாகரன் , பால சரவணன் ,பானுபிரியா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியான நாள் முதல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் உலகம் முழுவதும் நல்ல வசூலை ஈட்டி வரும் அயலான் படம் பல கோடி லாபம் பெற்று வருவதாக தகவல் பரவி வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் படக்குழுவே இப்படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது .

இதையடுத்து இப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி அதிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் மிக பெரிய பிளஸ் ஆக பார்க்கப்படுவது படத்தின் VFX பணிகள் தான் இதற்காக மட்டும் படக்குழு நிறைய பணம் செலவு செய்ததாக கூறப்டுகிறது.

அதன்படி இப்படத்தின் VFX பணிகளுக்கு மட்டுமே சுமார் ரூ.42 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  களத்தில் அதிரடி காட்டப்போவது யார்..? ஹைதராபாத் மண்ணில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய முடிவு..!!

More in Cinema News

To Top