Connect with us

3rd T20 : இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச முடிவு..!!

Featured

3rd T20 : இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச முடிவு..!!

இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 3 வது டி20 போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

விறுவிறுப்பும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடரை காண ரசிகர்கள் செம ஆவலாக உள்ளனர் என்பதை விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் நம்மால் பார்க்க முடிந்தது .

5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இதுவரை 2 போட்டிகளில் நடைபெற்று முடிந்த நிலையில் அந்த 2 போட்டியிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டி20 கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது . இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.

ரசிகர்களின் மிக பெரிய ஆரவாரத்துடன் கவுகாத்தி மைதானத்தில் இன்று நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணி மூன்றாவது வெற்றியை பெற்று தொடரை கைப்பற்றுமா அல்லது முதல் முதல் வெற்றியை ஆஸ்திரேலியா அணி ருசிக்குமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Box Office Success 💥 | ‘Tere Ishq Mein’ Collects ₹152 Cr Worldwide 🎬

More in Featured

To Top