Connect with us

“நடிகர் சூர்யாவுடன் அடுத்த படத்தில் நடிக்க வேண்டுமா?! வைரலாகிவரும் Post!”

Cinema News

“நடிகர் சூர்யாவுடன் அடுத்த படத்தில் நடிக்க வேண்டுமா?! வைரலாகிவரும் Post!”

சூர்யாவின் அடுத்த திரைப்படமான ’சூர்யா 43 ’ என்ற படத்தை சுதா கொங்கரா இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்திற்கு GV பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் கூறியிருப்பதாவது, புதிதாக உருவாக இருக்கும் ’சூர்யா 43 ’ என்ற தமிழ் திரைப்படத்திற்கு நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற உள்ளது.

18 முதல் 29 வயது வரையிலான ஆண்கள் மற்றும் பெண்கள், 30 முதல் 70 வரையிலான ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு விதமாக தேர்வுகள் நடைபெற இருப்பதாகவும், தேர்வுக்கு வரும் நபர்கள் தங்கள் நடிப்பு திறமையை வெளிப்படுத்த ஒரு நிமிடத்திற்கான காட்சியை தங்கள் சொந்த வசனத்துடன் தயார்படுத்திக் கொண்டு ஜனவரி 11 மற்றும் 12ஆம் தேதி நேரில் அணுகவும் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சமூக வலைதளத்தில் இந்த விளம்பரம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வாய்ப்பை நடிப்பு திறமையுள்ள புது முகங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான தாறுமாறு அப்டேட்..!!

More in Cinema News

To Top