Connect with us

தவெக கூட்டணி குறித்து விஜயிடம் கேளுங்கள் – பிரேமலதா விஜயகாந்த்

Featured

தவெக கூட்டணி குறித்து விஜயிடம் கேளுங்கள் – பிரேமலதா விஜயகாந்த்

தவெக கூட்டணி குறித்து பேச வேண்டும் என்றால் முதலில் விஜயிடம் பேசுங்கள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தச்சூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது :

அதிமுகவுடன் தவெக கூட்டணி குறித்து விஜயிடம் கேளுங்கள் என்றும், அதிமுக தலைமையில் நல்லதொரு கூட்டணி அமையும், உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கட்டும் என்றும், எங்கு தேமுதிக போட்டியிடும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு தமிழ் தான் முக்கியம் எனவும், இங்கு யாரும் எந்த மொழியையும் திணிக்க முடியாது எனவும், ஒருவர் விரும்பினால் மட்டுமே அந்த மொழியை கற்க முடியும் யாரும் திணிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பது போல் பேசத் தெரியாமல் பேசி நடிகை கஸ்தூரி மிகப்பெரிய சிக்கலில் மாட்டி கொண்டுள்ளார் என தெரிவித்தார்.

மேலும், “பெண்களை தவறாக பேசியது கண்டிக்கத்தக்கது, ஆனால் எத்தனையோ தலைவர்கள் என்னென்னவோ பேசி இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் கைது செய்யவில்லை. ஆனால் தீவிரவாதியை போன்று ஹைதராபாத்திற்கு சென்று போலீசார் கஸ்தூரியை கைது செய்துள்ளனர். இது வேதனைக்குரியது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Content is King! 2025-ல் அதிக லாபம் பெற்றவை டெப்யூட் படங்கள்தான்!

More in Featured

To Top