Connect with us

இந்தியாவுல சோத்துக்கே இல்லை… டாய்லெட் இல்லாம ஆஸ்காருக்கு வந்துட்டானுங்கனுதான் பார்ப்பாங்க.. – ARR பளீச்!

Featured

இந்தியாவுல சோத்துக்கே இல்லை… டாய்லெட் இல்லாம ஆஸ்காருக்கு வந்துட்டானுங்கனுதான் பார்ப்பாங்க.. – ARR பளீச்!

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்ட இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், தற்போது பேட்டியொன்றில் கூறிய கருத்தால் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளார்.

இசைப்புயல் ரகுமான் இசையில் உருவான ஆடு ஜீவிதம் படத்திற்கு கடந்த ஆண்டு கிராமி விருது கிடைத்தது. இதற்கு முன்னர், 2009ஆம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு இரட்டை ஆஸ்கார் விருதுகள் பெற்ற இவர், இந்தியாவின் முதல் ஆஸ்கார் வென்ற இசையமைப்பாளராக பெயர் பெற்றார். இந்நிலையில் அண்மையில் அவர் அளித்த பேட்டியில், ஆஸ்கார் விருதுகளில் உள்ள உண்மையை வெளிப்படுத்தினார்.

அவரது வார்த்தைகளில்,
“கிழக்கு நாடுகளிலிருந்து படம் சென்றாலே, நிறவெறி பார்வை இருக்கிறது. ‘இவனுக்கு சோத்தே இல்ல, டாய்லெட்டே இல்ல… இவன் படம் எடுத்து இங்க வந்துட்டானா?’ என்ற மனநிலையுடன் பார்க்கிறார்கள். அதை மீறி தான் நாம் கவனம் ஈர்க்க முடிகிறது.” அதே நேரத்தில், “RRR படத்தை அங்கே முழுமையாக கொண்டாடினார்கள். நானும் அப்போது அங்கிருந்தேன். ஹால் முழுக்க ரசிகர்கள். இசையமைப்பாளர் கீரவாணிக்கு கிடைத்த ஆஸ்கார் வெற்றி மிகப்பெரிய சாதனை.”

என்றும் தெரிவித்துள்ளார். இதை கேட்ட சிலர் அதிர்ச்சியடைந்தாலும், இது நிதர்சனமான உண்மை என இணையவாசிகள் கூறி வருகின்றனர். மேலும், ரகுமான் தனது இசை குறித்து கூறியது: “முன்னாள் பாடல்களில் வித்தியாசம் காட்ட, நாங்கள் முகத்தை திருப்பி வைத்து ரெகார்ட் செய்தோம். ஸ்டீரியோ சவுண்டில் வித்தியாசம் காட்ட 3D முறையிலேயே செய்தேன்.

இப்போது ரசிகர்கள் எதிர்பார்ப்பது – தக் லைஃப் படம்.
மணிரத்னம் இயக்கத்தில், கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாவது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மே 24ஆம் தேதி, சென்னை புறநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top