Connect with us

நான் வந்துட்டேனு சொல்லு – ஐபிஎல் ஏலத்தில் இணைந்த ஆர்ச்சர்..!!

Featured

நான் வந்துட்டேனு சொல்லு – ஐபிஎல் ஏலத்தில் இணைந்த ஆர்ச்சர்..!!

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தற்போது இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க போகும் புதிய 3 வீரர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளது.

2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நவம்பர் 24, 25 தேதிகளில் சவுதியின் ஜெட்டா நகரில் தொடங்க உள்ள நிலையில், ஏலத்தில் பங்கேற்க உள்ள வீரர்கள் பட்டியலை பிசிசிஐ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது.

அதன்படி ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க 577 வீரர்கள் தேர்வாகி உள்ளனர் . இந்த ஏலத்தில் பிரபல இங்கிலாந்து வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சரின் பெயர் இடம்பெறாமல் இருந்த நிலையில் தற்போது இந்த ஏலத்தில் பங்கேற்க மேலும் 3 வீரர்களின் பெயர்களை ஐபிஎல் நிர்வாகம் இணைத்து வெளியிட்டுள்ளது.

அதன்படி நாளை தொடங்க இருக்கும் இந்த மெகா ஏலத்தில் ஜோஃப்ரா ஆர்ச்சர், நேத்ராவல்கர், ஹர்திக் தாமோர் ஆகியோர் சேர்க்கப்பட்டு தற்போது ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “ஜனநாயகம் படம் ரிலீஸ் குழப்பம் – அரசியல் சூழ்நிலை காரணமா?”

More in Featured

To Top