Connect with us

தமிழ் படங்கள் ரூ.1,000 கோடி வசூல் செய்யாதது ஏன்? ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன காரணம்!

Featured

தமிழ் படங்கள் ரூ.1,000 கோடி வசூல் செய்யாதது ஏன்? ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன காரணம்!

தமிழ் சினிமா கடந்த ஒரு தசாப்தமாக உலகளவில் தனித்த அடையாளத்தை பெற்றுள்ளது. ‘2.0’, ‘விக்ரம்’, ‘ஜெயிலர்’, ‘கூலி’ உள்ளிட்ட படங்கள் பல்வேறு சாதனைகளை படைத்து 500 கோடி – 700 கோடி வரையிலான வசூலைப் பெற்றுள்ளன.

ஆனால் இன்னும் எந்த தமிழ் படம் ரூ.1,000 கோடி கிளப்பில் சேரவில்லை. இதுகுறித்து பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

செய்தியாளர் ஒருவர், “கன்னடம், இந்தி, தெலுங்கு படங்கள் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துவிட்டன. ஆனால் தமிழ் படங்கள் மட்டும் அதுவரை செல்லவில்லை. அதற்கு என்ன காரணம்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஏ.ஆர். முருகதாஸ்,

“மற்ற மொழி படங்கள் பொழுதுபோக்குக்காக மட்டும் எடுக்கப்படுகின்றன. அதனால் உலகளவில் அதிகமான ரசிகர்களை எளிதில் ஈர்க்க முடிகிறது.
ஆனால் தமிழ் இயக்குனர்கள் பெரும்பாலும் படத்தின் மூலம் சமூக கருத்துக்களையும் கல்வியையும் சொல்ல முயற்சிக்கிறார்கள். இதுதான் மற்ற திரைப்படத் துறைகளுக்கும் தமிழ் திரைப்படத் துறைக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமாக பார்க்கப்படுகிறது. இதுவே தமிழ் படங்கள் இன்னும் ரூ.1,000 கோடி வசூல் செய்யாததற்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

மேலும் அவர், “மார்க்கெட்டிங், பரவலான வெளியீடு, பான்-இந்தியா விநியோகம் ஆகியவை சரியாக செய்தால், தமிழ் சினிமாவும் 1,000 கோடி கிளப்பில் நிச்சயம் அடியெடுத்து வைக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் தற்போது ஒரு கேள்வியே நிலவுகிறது – தமிழ் சினிமாவின் முதல் 1,000 கோடி வசூல் சாதனை படைப்பு எது ஆகும்?

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top