Connect with us

43 வயதிலும் திருமணம் செய்யாத அனுஷ்கா – தனது முதல் காதலை பற்றி மனம் திறந்தார்!

Featured

43 வயதிலும் திருமணம் செய்யாத அனுஷ்கா – தனது முதல் காதலை பற்றி மனம் திறந்தார்!

சூர்யா, விஜய், அஜித் ஆகிய முன்னணி தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்த அனுஷ்கா ஷெட்டி, தென்னிந்திய சினிமாவில் டாப் கதாநாயகியாக திகழ்கிறார். இவர் கடைசியாக பிளாக்பஸ்டர் திரைப்படமான பாகுபலி 2-ல் நடித்தார். அதன் பின்னர் அனுஷ்கா நடித்த படங்களில் எந்தவிதமான பெரிய வெற்றி பெறவில்லை.

மேலும், தமிழ் சினிமாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இவர் நடித்து வருகிறார். சமீபத்தில், விக்ரம் பிரபு உடன் இணைந்து “காட்டி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால், சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. இதனால் ரசிகர்கள் திரைப்படத்தை திரையில் பார்க்க ஆவலாக காத்திருக்கிறார்கள்.

அனுஷ்கா தொடர்பான எந்த செய்தியும் வெளியாகும்போது, அவரது திருமண சம்பந்தமான பேச்சும் எழும். பாகுபலி படத்தின் காலத்தில், நடிகர் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா காதலித்து வந்ததாக பரபரப்பும் கிசுகிசுகளும் இருந்தது. ஆனால், இருவரும் நண்பர்களே என கூறி அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். வயது 43-ஆவது ஆண்டாகினாலும் திருமணம் செய்யாத அனுஷ்கா, ஒரு பேட்டியில் தனது முதல் காதல் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அவள் கூறியதாவது, “நான் 6ஆம் வகுப்பு படித்த காலத்தில், என் வகுப்பிலிருந்து ஒரு பையன் என்னிடம் வந்து, ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொன்னான். அவன் என்னை உயிருக்கு உயிராக நேசிப்பதாக கூறினான். ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்றால் என்ன அர்த்தம் என்று கூட எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் ‘சரி’ என அந்த காதலை ஏற்றுக்கொண்டேன். காதல் என்னவென்றே புரியாத வயதில் நடந்த அந்த சம்பவம், இன்றும் என் வாழ்க்கையில் இனிமையான நினைவாகவே உள்ளது” என்று அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  STR 49 வெற்றிமாறன்–சிம்பு புதிய படம்: டைட்டில் ரிவீல்!

More in Featured

To Top