Connect with us

லண்டனில் ராஜா போல அந்தோணி தாசன் – சொடக்கு ஸ்டைலில் மாஸ் போஸ்!

Featured

லண்டனில் ராஜா போல அந்தோணி தாசன் – சொடக்கு ஸ்டைலில் மாஸ் போஸ்!

தஞ்சாவூரின் ரெட்டி பாளையத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக உயர்ந்துள்ள கிராமிய பாடகர் அந்தோணி தாசன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் “ஓஜி சம்பவம்” இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளார்.

பாடகர் அந்தோணி தாசன், நடிகர் கருணாஸ் ஹீரோவாக நடித்த திண்டுக்கல் சாரதி திரைப்படத்தில், அவரது மனைவி கிரேஸ் உடன் இணைந்து “திண்டுக்கல்லு திண்டுக்கல்லு” என்ற பாடலைப் பாடி சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினார். அதன் பிறகு, நடிகர் சூர்யாவுக்காக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான “சொடக்கு மேல சொடக்கு” பாடல் மூலம் அவருக்கான புகழ் அதிகரித்தது.

பாடகர் மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்திய அந்தோணி தாசன் தற்போது ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்தோணி தாசன் பாடிய பல ஹிட் பாடல்கள் தமிழ் சினிமாவை செம்ம பயங்கரமாக கவர்ந்துள்ளன. அவர் முதன் முதலில் பாடிய பாடலே மிகப்பெரிய ஹிட் ஆகியது. அதன் பின் சூது கவ்வும் படத்தில் கானா பாலாவுடன் இணைந்து பாடிய “காசு பணம் துட்டு மணி மணி” பாடலும் பெரிய வெற்றியை கண்டது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, முண்டாசுப்பட்டி, ரோமியோ ஜூலியட், ஆம்பள, திரிஷா இல்லைன்னா நயன்தாரா, அரண்மனை 2, உறியடி, பவர் பாண்டி, மேயாத மான், தானா சேர்ந்த கூட்டம், பரியேறும் பெருமாள், யானை, வாத்தி, கருடன், விடாமுயற்சி போன்ற பல திரைப்படங்களில் அவர் பாடிய பாடல்கள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

இதே நேரத்தில், லண்டனில் ஜி.வி. பிரகாஷின் இசைக் கச்சேரிக்காக சென்ற அந்தோணி தாசன், அங்கே கார் அருகே மெஸ்மரைசிங் போஸில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவரது உடை, நடை மற்றும் ஸ்டைல் ஆகியவை ரசிகர்களிடையே “வேற லெவல்” என மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. 48 வயதான அந்தோணி தாசன், அவியல், உறியடி, எம்ஜிஆர் மகன், குயிக்கோ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்போது அவர் இயக்குநராக ஒரு புதிய படத்திலும் தீவிரமாக பணியாற்றி வருகிறார். மேலும், ஒரு பாடல் பாடுவதற்கே அவர் பல லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இசைக் கச்சேரிகளில் பங்கேற்பது, வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது உள்ளிட்ட வாய்ப்புகள் மூலமாக அவர் ஏகபோகமாக சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top