Connect with us

புதிய வீடு கட்டிய பிக்பாஸ் பிரபல அன்ஷிதா – வீட்டின் போட்டோஸ் இதோ!

Featured

புதிய வீடு கட்டிய பிக்பாஸ் பிரபல அன்ஷிதா – வீட்டின் போட்டோஸ் இதோ!

கேரளாவைச் சேர்ந்த பல நடிகைகள் தமிழ் சினிமாவிலும் சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘செல்லம்மா’ என்ற தொடரின் மூலம் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் அன்ஷிதா அக்பர்ஷா.

இந்த தொடருக்கு பிறகு, ‘குக் வித் கோமாளி’ எட்டாவது சீசனில் கலந்துகொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின்னர், ‘பிக்பாஸ்’ 8வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 84 நாட்கள் வெற்றிகரமாக விளையாடினார். பிக்பாஸ் வீட்டில் தங்கியதற்காக ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் என கூறப்பட்ட சம்பளத்தில், மொத்தமாக ரூ. 21 லட்சம் பெறப்பட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீரியல்களையும், விளையாட்டு நிகழ்ச்சிகளையும் தாண்டி, நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார். தற்போது, நடிகை அன்ஷிதா தனது வாழ்க்கையில் ஒரு புதிய முன்னேற்றமாக, சொந்த வீடு வாங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “புதிய தொடக்கம். எனது கனவு இல்லம். என் கனவு நிஜமாகியுள்ளது. இது வெறும் வீடு அல்ல, இது கடவுளின் பரிசு. கடினமான நேரத்தில் என்னுடன் இருந்த உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டு, வீட்டு பூஜை நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top