Connect with us

அனிருத் போட்டியாக பாலிவுட்டில் நுழையும் சந்தோஷ் நாராயணன்!

Featured

அனிருத் போட்டியாக பாலிவுட்டில் நுழையும் சந்தோஷ் நாராயணன்!

சந்தோஷ் நாராயணன் தமிழ் சினிமாவில் பரபரப்பாக வளர்ந்த இசையமைப்பாளராக மாறியவர். ஏ.ஆர். ரகுமான் உதவியாளராக துவங்கி, பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான “அட்டகத்தி” படத்துடன் இசையமைப்பாளராக தனது பயணத்தை துவங்கினார். அதன் பின்னர், “பீட்சா”, “சூது கவ்வும்”, “மெட்ராஸ்”, “36 வயதினிலே”, “இறுதிச்சுற்று”, “கபாலி”, “காலா”, “வட சென்னை” போன்ற வெற்றிப் படங்களின் இசையமைப்பை வழங்கி மிகப்பெரிய புகழ் பெற்றார்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களுக்கும் இசையமைத்த சந்தோஷ், தற்போது “கல்கி 2898 AD” என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது அனிருத் போன்று பாலிவுட் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் சந்தோஷ். அதாவது, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் “சிக்கந்தர்” படத்திற்கு இசையமைப்பவுள்ளார்.

மேலும், அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “சூர்யா 44” படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இதனால், அவர் எதிர்காலத்தில் மேலும் பரபரப்பான வெற்றிகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top