Connect with us

அமரன்: 2024 ஆம் ஆண்டின் பெரும் வெற்றி, நெட்ப்ளிக்ஸில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டது!

Featured

அமரன்: 2024 ஆம் ஆண்டின் பெரும் வெற்றி, நெட்ப்ளிக்ஸில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டது!

அமரன்” திரைப்படம் தமிழ் சினிமாவில் 2024ஆம் ஆண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகவே பேசப்படுகிறது. இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் திரைப்பயணத்தில் மிக அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது.

தீபாவளி ஸ்பெஷலாக வெளியான இப்படம் முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலில் பல முன்னணி படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த OTT வெளியீடு குறித்த அறிவிப்பு தற்போது வந்துள்ளது. “அமரன்” திரைப்படம் டிசம்பர் 5 அன்று நெட்ப்ளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நெட்ப்ளிக்ஸ் மூலம் இப்படத்தின் மொத்த ரசிகர்கள் வரிசையில் புதிய சாதனையை ஏற்படுத்துமா என்பது கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top