Connect with us

அல்லு அர்ஜுனுக்கு லிப் லாக், ராஷ்மிகாவுடன் கவர்ச்சி ஆட்டம் – ‘வந்துச்சே பீலிங்ஸ்’ வீடியோ!

Featured

அல்லு அர்ஜுனுக்கு லிப் லாக், ராஷ்மிகாவுடன் கவர்ச்சி ஆட்டம் – ‘வந்துச்சே பீலிங்ஸ்’ வீடியோ!

“புஷ்பா 2” திரைப்படம் அதன் வெளியீட்டின் பத்து நாட்களில் பெரும் வசூலை ஈட்டியுள்ளதுடன், ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ள முக்கிய அம்சமாக “வந்துச்சே பீலிங்ஸ்” வீடியோ பாடல் மாறியுள்ளது. இந்த பாடல், ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சியான ஆட்டம் மற்றும் அல்லு அர்ஜுனின் ஸ்டைலான நடனத்துடன் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இசை இயக்குநர் தேவி ஸ்ரீ பிரசாதின் துள்ளலான இசையில், விவேகா எழுதிய பாடல் வரிகள் ராஜலக்‌ஷ்மி மற்றும் செந்தில் கணேஷ் கூட்டணியில் பாடப்பட்டு, மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது. பாடல் முழுவதும், ராஷ்மிகா மற்றும் அல்லு அர்ஜுன் இடையே உள்ள கவர்ச்சி சூழலில் நடைபெறும் ஆட்டங்கள் தியேட்டர்களில் பெரும் ரசனையை ஏற்படுத்தியுள்ளன.

பாடலின் ஆரம்பத்தில், ராஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜுன் இடையே உள்ள லிப் லாக் காட்சியும், தொடர்ந்தும் துள்ளலான கவர்ச்சி ஆட்டங்களும், அதற்கு மேலும் பெரும் கவனத்தை பெற்றுள்ளன. இந்த பாடல் தற்போது, யூடியூப் போன்ற இணையதளங்களில் ரெக்கார்டு பார்வைகளை உருவாக்கி வருகிறது, இதனுடன் மக்கள் “பீலிங்ஸ்” பாடலை ரிப்பீட் மோடில் பார்த்து ரசிக்கின்றனர்.

எனினும், சமூக ஊடகங்களில் “பீலிங்ஸ்” பாடலின் கவர்ச்சியான காட்சிகள் குழந்தைகளுக்கு காட்டாமல் எச்சரிக்கை விடுத்தும், அந்த காட்சிகள் சமூக முறைகளை மீறக்கூடியதாகும் என சில நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top