Connect with us

10% காவல் அதிகாரிகளை தவிர அனைவருமே போதை பொருள் கடத்தலுக்கு உடந்தை – பகீர் கிளப்பிய டாக்டர் ராமதாஸ்..!!

Featured

10% காவல் அதிகாரிகளை தவிர அனைவருமே போதை பொருள் கடத்தலுக்கு உடந்தை – பகீர் கிளப்பிய டாக்டர் ராமதாஸ்..!!

போதை பொருள் கடத்தலுக்கு 850 போலீஸ் அதிகாரிகள் உடந்தை என்ற செய்தி தவறு. காவல்துறையில் உள்ளவர்களில் 10 சதவிதம் தவிர அனைவரும் உடந்தை என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறியதாவது :

தமிழகத்தில் சராசரியாக ஒரு குடும்பத்திற்கு ஒரு குடிகாரரை உருவாக்கிய நிலையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் பழக்கம் அதிகரித்துள்ளது. 1972ம் ஆண்டு முந்தைய தலைமுறை மது என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தது. அடுத்து வந்த 52 ஆண்டுகளில் சில ஆண்டுகள் தவிர மற்ற ஆண்டுகளில் மது ஆறாக ஓடி 3 தலைமுறைகளை பாதித்துள்ளது.

போதை பொருள் கடத்தலுக்கு 850 போலீஸ் அதிகாரிகள் உடந்தை என்ற செய்தி தவறு. காவல்துறையில் உள்ளவர்களில் 10 சதவிதம் தவிர அனைவரும் உடந்தை. இந்த அதிகாரிகளுக்கு இந்த உத்யோகம் தேவையா? டிஎன்பிஎஸ்சி குருப் 4 போட்டித்தேர்வில் 6244 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற நிலையில் 16 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் காலி பணியிடங்கள் 480 உயர்த்தி இருப்பது போதுமானது இல்லை.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், அத்தொகை அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதை வழங்காமல் தாமதிப்பது நியாயமல்ல. மகளிர் உரிமை தொகை வழங்க இவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் நகர்புறப்பகுதிகளில் 6 சதவீத சொத்துவரி உயர்த்த நகராட்சி நிர்வாகத்துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது . ஏற்கனவே 150 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்பட்டது. மேலும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே சொத்துவரி உயர்த்தப்பட்டால் பாமக மாபெரும் போராட்டத்தை நடத்தும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பொன்ராம் இயக்கிய ‘கொம்புசீவி’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

More in Featured

To Top