Connect with us

“கோடிகளில் விலை போன விடாமுயற்சி படத்தின் OTT, Satellite Rights! இத்தனை கோடிகளா?!”

Cinema News

“கோடிகளில் விலை போன விடாமுயற்சி படத்தின் OTT, Satellite Rights! இத்தனை கோடிகளா?!”

அஜித்தின் 62வது படமான AK 62, ‘விடாமுயற்சி’ என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தீபாவளி பிரேக் கூட இல்லாமல் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விடாமுயற்சி படத்தை ஓரிரு ஷெட்யூலில் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதனால், முதலில் வெளிநாட்டில் நடக்கும் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பின்னர் சென்னை திரும்ப பிளான் செய்துள்ளனர். இந்தப் படம் 2024 Summer ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விடாமுயற்சி ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருவதால், படத்தின் ப்ரீ ரிலீஸ் பிஸினஸை படக்குழு தொடங்கிவிட்டதாம். அதன்படி, OTT Rights, Satellite Rights இரண்டுமே முடிந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விடாமுயற்சி OTT உரிமையை Netflix நிறுவனம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளதாம். OTT, Satellite உரிமை இரண்டுமே பல கோடிகளில் விற்பனையாகியுள்ளதாகத் தெரிகிறது.

அதாவது இந்த இரண்டின் மூலமே 100 முதல் 150 கோடி வரை பிஸினஸ் நடந்துள்ளதாக கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் துணிவு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 350 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதேபோல், OTTயிலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால், விடாமுயற்சி படத்திற்கும் அதேபோன்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதனடிப்படையில் தான் விடாமுயற்சி ப்ரீ ரிலீஸ் பிஸினஸ் 100 கோடிக்கும் அதிகமாக நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மலையாள சினிமாவில் அறிமுகமாகும் பாரதிராஜா - வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

More in Cinema News

To Top