Connect with us

வெளியானது மிரட்டலான மேக்கிங் வீடியோ – ‘விடாமுயற்சி ‘ படத்தின் அப்டேட் கொடுத்த அஜித்தின் மேலாளர்..!!!

Cinema News

வெளியானது மிரட்டலான மேக்கிங் வீடியோ – ‘விடாமுயற்சி ‘ படத்தின் அப்டேட் கொடுத்த அஜித்தின் மேலாளர்..!!!

விடாமுயற்சி படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோவை வெளியிட்டு நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தற்போது சிறப்பான தரமான அப்டேட்டை கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் படம் தான் விடாமுயற்சி.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், பிரியா பவானி ஷங்கர், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அஜர்பைஜான் நாட்டில் பல மாதங்களாக முழு வீச்சில் உருவாகி வந்த இப்படத்தின் படப்பிடிப்புக்கு தற்போது குட்டி பிரேக் விடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நம்ப தலையும் வழக்கம் போல் பைக் ரைட் சென்றுவிட்டார் . இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகின்றனர்.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது அப்படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோவை வெளியிட்டு நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சிறப்பான தரமான அப்டேட்டை கொடுத்துள்ளார்.

அந்த மேக்கிங் வீடியோவில் அஜித் கார் ஓட்டும் காட்சிகள் இடம்பெற்றிருக்க அது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சினிமாவில் ஹீரோயினாகும் பிரபல சீரியல் நடிகை - முழு விவரம் இதோ

More in Cinema News

To Top