Connect with us

அஜித்தின் “குட் பேட் அக்லி” படத்தில் மாஸ் அப்டேட்: ரசிகர்களுக்கான ட்ரீட்!

Featured

அஜித்தின் “குட் பேட் அக்லி” படத்தில் மாஸ் அப்டேட்: ரசிகர்களுக்கான ட்ரீட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், தற்போது “விடாமுயற்சி” மற்றும் “குட் பேட் அக்லி” என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். “விடாமுயற்சி” படம் பொங்கலுக்கு வெளியீடு ஆகும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், படத்தின் வெளியீடு தள்ளப்பட்டதாக தயாரிப்பு குழு அறிவித்துள்ளது. இது பலரின் எதிர்பார்ப்புகளை குறைத்துள்ளது, மற்றும் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அஜித் “குட் பேட் அக்லி” படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து புதிய தோற்றத்தில் காட்சியளித்துள்ளார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள நிலையில், கல்யாண் மாஸ்டர் படத்தின் பாடலின் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

கல்யாண் மாஸ்டர் கூறியபடி, “அஜித் குமார் குட் பேட் அக்லி படத்தின் பாடலில் செமையாக ஆட்டம் போட்டுள்ளார். அவரது நடனத்தை கண்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அனைவரும் ஆச்சிரியம் அடைந்தனர். இந்த பாடல் அஜித் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த ட்ரீட் ஆக அமையும்.”

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top