Connect with us

போடு தகிட தகிட : அஜித்குமாரின் 63வது படத்தின் தாறுமாறு அப்டேட் வெளியானது..!!

Cinema News

போடு தகிட தகிட : அஜித்குமாரின் 63வது படத்தின் தாறுமாறு அப்டேட் வெளியானது..!!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் 63வது படம் குறித்த தாறுமாறான அப்டேட் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் அஜிகுமாரின் அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அப்டேட் என்னவென்றால் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் 63வது படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என பெயரிடப்பட்டுள்ளது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இத்திரைப்படம் 2025 பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .

சுமார் 11 மாதங்களுக்கு பிறகு அஜித்குமாரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாவதால் ரசிகர்கள் செம குஷியில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.

https://twitter.com/Adhikravi/status/1768267113461059609

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஜித் குமாருக்கு மகிந்திரா அதிரடி பரிசு – உலகின் முதல் Formula-E தீம் SUV வழங்கப்பட்டது!

More in Cinema News

To Top