Connect with us

மீண்டும் மோதப்போகும் அஜித் – விஜய்..!தீபாவளிக்கு பெரிய சம்பவம் இருக்கு!

Cinema News

மீண்டும் மோதப்போகும் அஜித் – விஜய்..!தீபாவளிக்கு பெரிய சம்பவம் இருக்கு!

இந்த ஆண்டு ஆரம்பமே விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் ஒரே நாளில் பொங்கல் ஸ்பெஷலாக வெளிவந்தது…இதில் அணைத்து ரசிகர்களுக்கும் சண்டைகள் வந்தாலும் இப்படி தான் ஆரம்பம் ஆனது..

இந்த Clashஇல் துணிவு முதல் நாளில் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது…ஆனால் வாரிசு படத்திற்கு முதல் நாள் கலவையான விமர்சனங்கள் தான் வந்தது அதன்பின் குடும்ப ரசிகர்களின் மத்தியில் மாபெரும் அளவில் வாரிசு படத்திற்கு வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது…இன்னும் கூட ரசிகர்கள் இந்த படத்தை வைத்து சண்டை போட்டு வருகின்றனர்..

இந்நிலையில் வாரிசு – துணிவு படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் – அஜித்தின் படங்கள் ஒரே நாளில் வெளிவரவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது…அதுவும் இப்போது அஜித்தை வைத்து இயக்க போவது Fan Boy என்றும் சொல்லலாம்…

அப்படி வர இருக்கும் படம் விடாமுயற்சி கிடையாது..விடாமுயற்சி படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ஏகே 63 படம் தான் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்…படத்தின் வேலைகள் இப்போதே ஆரம்பம் ஆகி விட்டதாம்…

இதனால் மீண்டும் ஒரு முறை விஜய் – அஜித் படங்கள் ஒரே நாளில் மோதிக்கொள்ளவுள்ளது. இதில் வெற்றி யார் பக்கம் வரப்போகிறது…இது யார் தீபாவளி என்று பொறுத்திருந்து பாப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உறியடி விஜய் குமார் நடித்துள்ள ‘எலக்சன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

More in Cinema News

To Top