Connect with us

அஜித்துடன் இணையும் இரண்டு முன்னணி நடிகைகள் – ஏகே 64 லேட்டஸ்ட் அப்டேட்..

Featured

அஜித்துடன் இணையும் இரண்டு முன்னணி நடிகைகள் – ஏகே 64 லேட்டஸ்ட் அப்டேட்..

அஜித் நடிப்பில் விரைவில் உருவாகவுள்ள புதிய படம் ஏகே 64. குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு இந்த படத்தையும் இயக்கப் போவது ஆதிக் ரவிச்சந்திரன்தான் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தான் இசை அமைக்க இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் அஜித்துடன் இணைந்து இரண்டு நடிகைகள் நடிக்கவுள்ளனர் என்ற அப்டேட்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நயன்தாரா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். நயன்தாரா ஏற்கனவே பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் அஜித்துடன் நடித்துள்ளார்.

மேலும், பூஜா ஹெக்டே இரண்டாம் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்ற தகவலும் பரவியுள்ளது. அப்படி நடந்தால், பூஜா ஹெக்டே அஜித்துடன் முதல் முறையாக இணைவதாக இருக்கும். இது எந்தளவிற்கு உறுதி என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததுவரை காத்திருக்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top