Connect with us

அஜித் எப்படிப்பட்டவர் தெரியுமா.. உருக்கமாக பதிவிட்ட பிரியா வாரியர்!

Featured

அஜித் எப்படிப்பட்டவர் தெரியுமா.. உருக்கமாக பதிவிட்ட பிரியா வாரியர்!

நடிகை பிரியா வாரியார், அஜித் சார் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான பதிவு போட்டிருக்காங்க. “இதையெல்லாம் நீண்ட நாட்களாக சொல்லவேணும் என்றே எண்ணினேன். அஜித் சார், உங்களிடம் எனக்கு இருக்கும் மரியாதை வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு அதிகம். முதல் நாள் பேசியது முதல், கடைசி நாள் ஷூட்டிங் வரை ஒரு நல்ல உணர்வை ஏற்படுத்தினீர்கள். எவரும் தவறாக உணரக்கூடாதேனும் பார்த்துக்கிட்டீர்கள். செட்டில் நீங்கள் இருந்தாலே, எல்லாரையும் கவனிப்பீர்கள்.

ஒரு வேளை நம்ம cruise கப்பலில் சென்ற நினைவுகள்… ஒன்றாக சாப்பிட்ட உணவு.
அடித்த ஜோக்குகள். அது ஒரு அழகான தருணம். உங்களைப் போல ஒருவரை நான் இதுவரை பார்த்ததில்லை. கார், குடும்பம், ரேசிங் போன்ற விஷயங்கள் பற்றி பேசும்போது உங்கள் கண்கள் எப்படி மின்னுகிறதோ, அதையே பார்த்தேன்.
உங்களை சுற்றியுள்ளவர்களை நீங்கள் பாராட்டுவீர்கள். கவனிப்பீர்கள்.
உங்கள் பொறுமையும் அர்ப்பணிப்பும் எனக்கு பெரிய உந்துதல்.

எவ்வளவு உயரம் சென்றாலும், எளிமையோட நடந்துக்க வேண்டும்னு உங்களைப் பார்த்துத்தான் கற்றுக்கிட்டேன். அஜித் சார், ‘குட் பேட் அக்லீ’ பட அனுபவம் என் வாழ்நாளெல்லாம் நினைவில் இருக்கும். உங்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, என் வாழ்கையின் பெரும் சாதனை. நன்றி. என் மனதிலிருந்து நன்றி.” இந்த வார்த்தைகள் எல்லாம், அஜித் சார் மீது நடிகை பிரியா வாரியாருக்குள்ள மரியாதையையும், பாசத்தையும் சொல்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டிராகன் வெற்றி! அஸ்வத் மாரிமுத்துக்கு கிடைத்த ஜாக்பாட்!

More in Featured

To Top