Connect with us

மொட்டை லுக்கில் தல அஜித் – இணையத்தில் ஹிட் ஆன புதிய வீடியோ!

Featured

மொட்டை லுக்கில் தல அஜித் – இணையத்தில் ஹிட் ஆன புதிய வீடியோ!

இவர் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இந்த ஆண்டில் வெளியாகி, உலகளவில் ரூ. 285 கோடி வசூலித்து, அவரது திரைப்பட கரியரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படமாக மாறியுள்ளது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, அஜித் நடிக்கும் அடுத்த படம் AK 64 ஆகும். இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இப்படத்தில் நடித்ததற்காக நடிகர் அஜித் ரூ. 180 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒருபுறம் சினிமா, மறுபுறம் கார் ரேஸிங் என இரண்டும் சமநிலையுடன் செய்து வருகிறார் அஜித். தற்போது நடைபெற்று வரும் GT4 European Series கார் ரேஸில் கலந்து கொள்ள அவர் தயாராகி வருகிறார்.

இந்த ரேஸின் மூன்றாவது சுற்றில் பங்கேற்கும் அஜித், தனது தோற்றத்தில் மாற்றம் கொண்டு, தலையை முழுமையாக மொட்டை அடித்துள்ளார். அவரது புதிய கெட்டப்பை பார்த்த ரசிகர்கள், “அஜித் ரெட் மற்றும் வேதாளம் கணேஷ் போல இருக்கிறார்” எனக் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அஜித் ரேஸிற்கான தயாரிப்பை உள்ளடக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “மூளை கம்மி நகைச்சுவை! ரசிகர்களை உருக வைத்த சிவகார்த்திகேயன் 💛பேச்சு!”

More in Featured

To Top