Connect with us

அஜித் குமார் பத்ம பூஷன் விருது பெற்றதை அடுத்து, வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

Featured

அஜித் குமார் பத்ம பூஷன் விருது பெற்றதை அடுத்து, வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ அஜித். இவரின் நடிப்பில் விடாமுயற்சி படம் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியாவதாக உள்ளது. இதனுடன் குட் பேட் அக்லி படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில், துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் மூன்றாவது இடம் பிடித்து, ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார்.

அடுத்ததாக, கடந்த வாரம் பத்ம விருதுகள் பட்டியலில், நடிகர் அஜித் குமாருக்கு கலை பிரிவில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இவர், பத்ம பூஷன் விருது பெற்ற ஐந்தாவது தமிழ் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட பின், பல அரசியல் பிரபலங்களும், திரை நட்சத்திரங்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அஜித்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அஜித் குமாருக்கு பெருமையான சாதனைகளுக்கு இவ் வாழ்த்து, அவரது சாதனையை மேலும் உயர்த்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பாகுபலி தி எபிக் ரீ-ரிலீஸ் – மீண்டும் பட்டையை கிளப்பும் வசூல் வேட்டை!

More in Featured

To Top