Connect with us

அஜித் கோபம் அடைந்த தருணம் – ரசிகரின் செயலில் முகம் மாறிய வீடியோ இணையத்தில் வைரல்!

Cinema News

அஜித் கோபம் அடைந்த தருணம் – ரசிகரின் செயலில் முகம் மாறிய வீடியோ இணையத்தில் வைரல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் தற்போது சினிமாவைத் தாண்டி கார் ரேஸிங்கில் தனது முழு நேரத்தையும் செலுத்தி வருகிறார். வெளிநாடுகளில் நடைபெறும் பல போட்டிகளில் பங்கேற்று, அடிக்கடி டாப் 3 இடங்களில் இடம்பிடித்து வருவது ரசிகர்களிடையே பெரும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது. இதேசமயம், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அவரது அடுத்த படத்தின் அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில், வெளிநாட்டில் ரேசிங்கில் ஈடுபட்டிருந்த அஜித்தை சந்திக்க ரசிகர்கள் சிலர் சென்றுள்ளனர். அவரை பார்த்தவுடன் உற்சாகத்தில் கூச்சலிட்ட ரசிகர்களில் ஒருவர் விசில் அடித்துள்ளார். அந்த நொடியில் அஜித்தின் முகபாவனை திடீரென மாறியதாக வீடியோவில் தென்பட்டது. அவர் கைகாட்டி “விசில் அடிக்காதீர்கள்” என ரசிகர்களிடம் சைகை செய்தார்.

அந்த தருணம் பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. பலரும் “அஜித் ரசிகர்களிடம் கூட ஒழுக்கத்தை எதிர்பார்க்கிறார்” எனக் கூறி வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். சிலர் “அஜித் எவ்வளவு அமைதியானவர் என்றால் இதில்தான் தெரிகிறது” எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Richard Rishi உடன் ரக்ஷனா ஹீரோயின்! Draupadi 2 First Look Trending!”

More in Cinema News

To Top