Connect with us

அஜித் குமார் டிஸ்சார்ஜ்! உடல்நிலை குறித்து புதிய அப்டேட்!

Featured

அஜித் குமார் டிஸ்சார்ஜ்! உடல்நிலை குறித்து புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ சமீபத்தில் வெளியானது. இயக்கம் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில், மைத்திரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். இசையை ஜி.வி. பிரகாஷ் வழங்கியிருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதே நேரத்தில், சமீபத்தில் அஜித் குமாருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை குடியரசுத் தலைவர் அவர்களிடமிருந்து நேரில் பெற்றுக்கொண்ட அஜித், அதன் பிறகு சென்னை திரும்பினார். இந்நிலையில், நேற்று கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அஜித் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தனது உடல்நல பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த செய்தி அவரது ரசிகர்களிடம் சிறு பதட்டத்தை ஏற்படுத்தியது. இப்போது, அவர் சிகிச்சை முடித்து நலமுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அஜித் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பாடகர் ஹர்ஷவர்தன் தமிழில் நாயகனாக அறிமுகம்

More in Featured

To Top